Kajal Agarwal Selfie With Husband

மாஸ்க் முக்கியம் மக்களே என கணவருடன் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal Selfie With Husband : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, கமல், தனுஷ் என அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை என்ற பெருமை இவருக்கு உண்டு.

தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது சோலோ நாயகியாகவும் வெப் சீரிஸ் தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நம்மை பாதுகாப்பு கொள்ள மாஸ்க் கட்டாயம் என்பதை உணர்த்தும் வகையில் இருவரும் மாஸ்க் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.