Kajal About Thala Thalapathy
Kajal About Thala Thalapathy

விஜய் திறமையான நடிகர் ஆனால் அஜித் சூப்பர் ஸ்டார் என பேசியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Kajal About Thala Thalapathy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பாகவே பிரபல நடிகையை பெண் கேட்டு சென்றாரா அஜித்?? முதல் முறையாக வெளியான ஷாக்கிங் தகவல்!

அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் அஜித் விஜய் குறித்து பேசியவை சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

அதாவது தளபதி விஜய் திறமையான நடிகர் எனக் கூறியுள்ளார். அதேபோல் தல அஜித் மிகவும் சாதாரண மனிதர் போலவே நடந்து கொள்கிறார். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ரஜினி சூப்பர் ஸ்டார், சிவகார்த்திகேயன்?? பிரபல தயாரிப்பாளர் கொடுத்த புதிய பட்டம் – என்னனு நீங்களே பாருங்க.!

அதே போல் இவர் அஜித்துடன் இணைந்து விவேகம் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படம் உருவாகி என்பது குறிப்பிடத்தக்கது.