இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தொடங்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Kajal About Indian 2 Shooting : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இறுதியாக டு பாயிண்ட் ஓ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இத்திரைப்படம் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலை வேட்டையாடியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சங்கர் அடுத்ததாக இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Kajal

உலகநாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். மேலும் சித்தார்த், சதீஷ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்காமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில் இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது இந்தியன் 2 திரைப்படத்தில் அதிகமான அமெரிக்கர்கள் நடித்து வருகின்றனர். தற்போது கொரானா கட்டுப்பாடு காரணமாக அவர்களால் இந்தியா வர முடியவில்லை. இதனால் தான் படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப் போவதாக தெரிவித்துள்ளார்.