Kaithi Reviews
Kaithi Reviews

லோகேஷ் கனகராஜ் இயக்கத்த்தில் கார்த்தி நடிப்பில் பிகிலுக்கு போட்டியாகிக் வெளியாகியுள்ள திரைப்படம் கைதி.

Kaithi Movie Reviews

எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதை :

போதை பொருட்களை கடத்தும் கும்பலிடம் இருந்து நரேன் தலைமையிலான போலீஸ் குழு போதை மருந்துகளை பறிமுதல் செய்கிறது.

இதனையடுத்து இந்த போதை பொருட்களை மீட்டெடுக்க ஆட்களை அனுப்புகின்றனர் வில்லன்கள் டீம்.

அப்போது 10 வருடமாக சிறை கைதியாக இருந்த கார்த்தி வெளியே வர மீண்டும் அவரை போலீஸ் குழு சந்தேகத்தின் பேரில் சிறை பிடித்து விடுகிறது.

பின்னர் இந்த மொத்த போலீசில் ஒரு சூழ்ச்சியில் சிக்கி கொள்கின்றனர். அதன் பின்னர் கைதி கார்த்தி அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

கார்த்தி வழக்கம் போல தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். சண்டை காட்சிகளில் சாதுர்யமான நடிப்பை கொடுத்துள்ளார்.

வில்லன்களாக நடித்துள்ள நால்வரில் அன்புவின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

மோனிகா குழந்தையின் நடிப்பு ரசிகர்களை கவர்வது உறுதி.

தொழில்நுட்பம் :

இசை :

சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

ஒளிப்பதிவு :

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். படத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு காட்சியில் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. அதிலும் தன்னுடைய சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி படமாக்கியுள்ளார்.

எடிட்டிங் :

பிலோமின் ராஜ் படத்திற்கு என்ன தேவையோ அந்த காட்சிகளை சிறப்பாக தேர்வு செய்து படமாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

லோகேஷ் கனகராஜ் பாடல்கள், நாயகி, நடனம் என எதுவும் இல்லாமல் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து அதிலும் வெற்றி கண்டுள்ளார்.

படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் இடையில் செண்டிமெண்ட் காட்சிகளை வைத்து நம்மை கட்டி போடவும் மறக்கவில்லை.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. கார்த்தி, மோனிகா பாப்பா, அன்பு நடிப்பு.
3. லோகேஷ் கனகராஜின் இயக்கம்.
4. இசை
5. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்.

2. பிரிட்டிஷ் காரன் கதவு உடையாது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

YouTube video

REVIEW OVERVIEW
கைதி திரை விமர்சனம்!
kaithi-reviewsமொத்தத்தில் கைதி கார்த்திக்கு கை கொடுக்கும் படம் தான்.