லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

தீபாவளி விருந்தாக கடந்த 25ம் தேதி பிகில் படத்தோடு, கார்த்திக் நடித்த கைதி திரைப்படமும் வெளியானது.

பிகிலுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது. பல திரையரங்குகளில் கைதிக்கு ஒரு காட்சிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

ஆனால், கைதி படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் நேர்மறையான விமர்சனங்களால் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது.

அதோடு, கைதி திரைப்படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. பிகில் திரைப்படத்தை வாங்கிய சில வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள் எனவும், கைதி படத்தால் வினியோகஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

kaithi

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், தமிழகத்தில் ரூ.22.43 கோடியும், சென்னையில் மட்டும் ரூ. 2.14 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், கேரளாவில் ரூ.4.2 கோடியும், கர்நாடகாவில் ரூ.4.7 கோடியும், ஆந்திராவில் ரூ.9.1 கோடியும், வட இந்தியாவில் ரூ.1.5 கோடியும் இப்படம் வசூல் செய்துள்ளது. அதோடு வெளிநாடுகளில் ரூ.6 கோடியும் வசூலாகியுள்ளது.

இப்படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.48 கோடி வசூல் செய்துவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.