விஜயுடன் மோத உள்ள கார்த்தியின் கைதி திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்கள் அதிகார்பூர்வமாக வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
பிகிலுடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் திரைப்படமும் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் தியேட்டர் கிடைப்பதில் நிச்சயம் சிக்கல் ஏற்படும் என்பதால் சங்க தமிழன் சைலண்டாக விலகி கொண்டது. கைதி கண்டிப்பாக மோதுவோம் என ரேஸுக்கு தயாராகி விட்டது.
இதனை மேலும் உறுதி செய்யும் விதமாக இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
#Kaithi marching towards #Diwali2019 #KaithiDiwali pic.twitter.com/c1Qa6bEZaV
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 14, 2019