Kadhal Kottai Movie Success Secrets
Kadhal Kottai Movie Success Secrets

அஜித் சொன்ன மாற்றங்களும் காதல் கோட்டை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Kadhal Kottai Movie Success Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி கிட்டத்தட்ட 270 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காதல் கோட்டை.

அஜித்தும் தேவயானியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதலித்து இருபதில் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கியிருந்தார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் காதல் கோட்டை படத்தின் கிளைமாக்ஸில் அஜித் சில மாற்றங்களை கூறியதாக கூறியுள்ளார்.

அந்த மாற்றங்களும் இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியதாக அகத்தியன் தெரிவித்துள்ளார். இவர் இப்படத்திற்கு முன்னதாக அஜித்தை வைத்து வான்மதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

கவின் லாஸ்லியா பற்றி வனிதா கூறிய தகவல்கள்.. இவங்களா இப்படி எல்லாம் பண்றாங்க?? – வைரலாகும் வீடியோ

இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கும் அதிகமாக ஓடியது. இதனால் அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய இயக்குனராக அகத்தியனும் இடம் பெற்றுள்ளார் என்றால் அது மிகையாகாது.

மேலும் அஜித் சிறந்த மனிதர். தாங்கள் டாப் ஹீரோ என்ற நினைப்பு இல்லாமல் அனைவரிடமும் சமமாக பழகுபவர் என கூறியுள்ளார்.

காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 24 வருடங்கள் ஆகி விட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.