Kadambur Raju About Theatre Opening
Kadambur Raju About Theatre Opening

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Kadambur Raju About Theatre Opening : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திய வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் 50,000-க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.

அதேபோல் தமிழகத்திலும் இந்த வைரசால் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பொது இடங்களில் கூடாமல் இருக்க தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

திரையரங்குகள் மூடப் பட்டிருப்பதால் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

எடிட்டர் யாருப்பா?? இணையத்தில் வைரலாகும் இரண்டு நிமிட மாஸ்டர் ஓபனிங் சீன், ஏமார்ந்து போன விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!!

சினிமா ரசிகர்களும் தியேட்டர் பக்கம் சென்று ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் எப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலையில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்னரே திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலே ஜீ5, அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT தளங்கள் வழியாக படங்கள் ரிலீசாவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.