Kadambur Raju About Master Release

மாஸ்டர் ரிலீஸ் குறித்த மகிழ்ச்சி தகவல் ஒன்றை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Kadambur Raju About Master Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய் வந்தது.

அதன் பின்னர் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையரங்குகள் அப்போதுதான் திறக்கப்பட்டது என்பதன் காரணத்தினால் படம் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது.

மேலும் இந்த படத்தை படக்குழு பொங்கல் விருந்தாக வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அப்போதும் கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தால் தான் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்குள் திரையரங்குகளுக்கு மக்களை வரவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்குள் தமிழகம் கொரானா இல்லாத மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனால் திரையரங்குகளில் கூட்டம் நிச்சயம் வரும் என எதிர்பார்க்கலாம்.

அமைச்சரின் இந்த பேச்சாளர விஜய் ரசிகர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.