இறுதி நாளில் சட்டசபையில் பேசியது முதல்வர் இல்லை! - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி .!! | Tn govt

Kadambur Raju About Cm Speech : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி அவர்கள் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார்.

இந்தியாவின் மிகச் சிறந்த முதல்வர்களில் பட்டியலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. மக்களின் துயரங்களையும் இன்னல்களையும் அறிந்து தக்க நேரத்தில் தரமான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

விவசாயம் முதல் கல்வி வரை அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத புரட்சியை ஏற்படுத்தி உள்ளார் எனலாம். ஒரு நாள் கூட தவறாமல் தினந்தோறும் சட்டசபைக்கு வந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Kadambu raju

மேலும் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் மாவட்ட வாரியாக சென்று நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் சட்டசபையில் இறுதி நாளில் பேசியது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அல்ல, ஜெயலலிதாவின் ஆன்மா என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வரை சிறந்த முதல்வர் என பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.