Kadaaram Kondan

KK Update : விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது. அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

அஜித் பிறந்தநாளில் கமல் தரும் ஸ்பெஷல் விருந்து – என்னன்னு நீங்களே பாருங்க!

இப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் வேகமாய் பரவத் துவங்கியது. ஆனால் அதை படக்குழு உடனடியாக மறுத்தனர். ரிலீஸ் தேதியை நாங்களே அறிவிக்கிறோம் என்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று நாளை வெளிவரவுள்ளது. இப்பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியிருப்பதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஸ்ருதி ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.