2015-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த படம் நானும் ரௌடி தான். ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் என நானும் ரௌடிதான் படக்குழுவினர் மீண்டும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

கூடுதல் சிறப்பாக நடிகை சமந்தாவும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக இணைந்துள்ளார். அண்மையில் இப்படத்தின் தலைப்பை புதுமையான முறையில் படக்குழு அறிவித்திருந்தனர். அனிருத்தின் துள்ளலான இசையில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்த அந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதைதொடர்ந்து தற்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கரண் ஜோகரும் இந்த வீடியோவை வியந்து பாராட்டியுள்ளார். மிகவும் புதுமையான முறையில் இந்த வீடியோ இருந்ததாக படக்குழுவினருக்கு கரண் ஜோகர் தனது பாராட்டுக்களை மனதார தெரிவித்துள்ளார்.

மோஷன் போஸ்டரே பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.