Kaappaan Movie Review | Suriya | Arya | MohanLal | K V Anand | Kaappaan Movie Tamil Review | Kollywood Cinema News | Tamil Cinema News
கே. வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயீஷா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Kaappaan Movie Review : 

கதைக்களம் :

நாட்டின் பிரதமரான மோகன் லாலை கொல்வதற்காக ஒரு கூட்டம் திட்டம் தீட்டுகிறது. அதே போல் சூரியாவும் சில திட்டங்களை தீட்டுகிறார். ஆனால் அவரின் திட்டங்கள் பிரதமரின் நன்மைக்காக தான். அதாவது சூர்யா இந்த படத்தில் ரகசிய உளவாளியாக நடித்துள்ளார்.

அதன் பின்னர் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக சேர்கிறார், அதன் பின்னரும் பிரதமரின் உயிருக்கு பல ஆபத்துகள் வருகின்றன. அவைகளில் இருந்து மோகன் லாலை சூர்யா எப்படி காப்பாத்துகிறார் என்பது தான் என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சூர்யா வழக்கம் போல ஒரே மனிதராக படத்தின் கதையை சுமந்து செல்கிறார். காதல், ஆக்ஷன், எமோஷனல் என அனைத்திலும் அசத்தியுள்ளார். அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

மோகன் லாலின் கண் அசைவு கூட படத்திற்கு பலம் சேர்த்துள்ளது என்றால் அவரின் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும்.

ஆர்யாவும் அவருடைய பாணியில் அவரது கதாபாத்திரத்தை திறம்பட செய்து முடித்துள்ளார். சாயீஷாவுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் அவரின் வேலையை அற்புதமாக முடித்து கொடுத்துள்ளார்.

மேலும் சமுத்திரக்கனி, வித்யு ஜமால், பூர்ணா என படத்தில் நடித்துள்ள அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

பிகிலில் விஜய்க்கு இரட்டை வேடம் இல்லை, கதை இதுதானாம் .!

தொழில் நுட்பம் :

இசை :

ஹரிஷ் ஜெயராஜின் இசை அமேஸிங். பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார். பாடல்கள் ரசிக்கும் வகையில் அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு :

எம்.எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் தெளிவாக படம் பிடித்துள்ளது.

எடிட்டிங் :

அந்தோணியின் எடிட்டிங் கன கச்சிதம். படத்தை அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

கே. வி ஆனந்த் அயன் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து விட்டார். அந்த படத்திற்கு பிறகு மாற்றான் படத்திலும் அவருடைய திறமையான இயக்கத்தை கொடுத்திருந்தார். காப்பானிலும் அதை அற்புதமாக செய்து விட்டார்.

படத்தின் கதையை அழகாக கொண்டு சென்று சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. சூர்யா, ஆர்யா, மோகன் லால் நடிப்பு
3. இயக்கம்
4. ஒளிப்பதிவு
5 விவசாயத்தை பற்றி பேசியது

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கான சிறு சிறு லாஜிக்கல் தவறுகளை தவிர பெரிய அளவிலான மைனஸ் எதுவும் இல்லை.

YouTube video

REVIEW OVERVIEW
காப்பான் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kaappaan-movie-reviewமொத்தத்தில் காப்பான் சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.