Ka Pae Ranasingam Teaser
Ka Pae Ranasingam Teaser

அரசியல் வசனங்கள் உடன் அதிர வைக்கும் வகையில் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Ka Pae Ranasingam Teaser : தமிழ் சினிமாவில் விறுவிறுவென உச்சகட்ட நடிகரான விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் பெ விருமாண்டி என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க.பெ ரணசிங்கம்.

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் நடித்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் இன்னும் பலர் இப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அவசர அவசரமாக அஜித் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் இதுதானா?? வெளியான தகவல்!

நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகியிருந்த நிலையில் இன்று டீசரை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

டீசரில் அரசியல்வாதிகளால் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை அழகாக எடுத்து பேசியுள்ளனர்.

ஜனங்களுக்கு குடிக்க ஒரு குடம் தண்ணீர் இல்லை ஆனால் பெரிய பெரிய நிறுவனங்கள் ஆற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன.

தண்ணீர் பிரச்சனை, விவசாயப் பிரச்சினை, சாதாரண குடும்பங்கள் படும் பிரச்சினை என மிகவும் யதார்த்தமான கதை களத்துடன் இப்படம் உருவாகி இருப்பதை படத்தின் டீசர் தெளிவுபடுத்தியுள்ளது.

ரோட்டோர கடையில் வேலை பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதுவும் என்ன செய்கிறார் பாருங்க – ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த வீடியோ

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் என இருவருக்கும் இந்த படம் ஒரு முக்கிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருவருமே தங்களது எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்திருப்பது டீசரின் மூலமாக தெள்ளத் தெளிவாகியுள்ளது.

இதோ இந்த டீசரை நீங்களே பாருங்க