Ka.Pae.Ranasingam Song Update
Ka.Pae.Ranasingam Song Update

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

Ka.Pae.Ranasingam Song Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம்.

பி.விருமாண்டி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து இன்று மாலை 7.02 மணிக்கு இப்படத்தில் இருந்து அழகிய சிரிக்கி என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்தை கே ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.