Ka.Pae. Ranasingam First Look
Ka.Pae. Ranasingam First Look

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்து வரும் க/பெ ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்vளது.

Ka.Pae. Ranasingam First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம் என தனக்கு ஏற்ற சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷுக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. அடுத்த படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் தெரியுமா?

மேலும் இவர் தற்போது பெ. விருமாண்டி என்பவரின் இயக்கத்தில் க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மிக விரைவில் ரிலீசாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கவின் நடிக்கும் இரண்டாவது படம் லிப்ட், வெளியானது அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் – நீங்க பார்துடீங்களா? ( புகைப்படம் உள்ளே )

விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கடைசி விவசாயி, துக்ளக் தர்பார், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல் என டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.