Jyothika Reply to Chandramukhi 2 Team
Jyothika Reply to Chandramukhi 2 Team

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கேட்டதற்கு ஜோதிகா அதிர்ச்சி பதிலை கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jyothika Reply to Chandramukhi 2 Team : தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் பி வாசு. ஆனால் இப்படத்தில் வேட்டையனாக நடித்த ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

சூரிய ஒளியில் அரைகுறை உடையில் காற்று வாங்கும் எமி ஜாக்சன் – வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

ஜோதிகாவும் தற்போது சினிமாவில் நடித்து வருவதால் இந்த படத்திலும் அவரையே சந்திரமுகியாக நடிக்க வைக்கலாம் என படக்குழு ஆலோசித்து உள்ளது.

இதனையடுத்து ஜோதிகாவை அனுப்பிய போது அவர் கேட்ட சம்பளம் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அவர் கோடிகளில் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஜோதிகா என்னதான் சினிமாவில் நடித்து வந்தாலும் தற்போது அவருடைய மார்க்கெட் கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு இல்லை என்பதால் படக்குழு தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

ஜோதிகாவுக்கு பதில் இளம் நடிகை யாரையாவது நடிக்க வைக்கலாம் எனவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.