Jyothika About Chandramukhi 2
Jyothika About Chandramukhi 2

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா நடிப்பது இருப்பதாக பரவிய‌ தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

Jyothika About Chandramukhi 2 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.

இயக்குனர் பி வாசு இயக்கிய இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விஜயுடன் மீண்டும் இணைவேன்?? அவர் சிறந்த நடிகர் – பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ, அப்போ தளபதி 65 ஹீரோயின் இவர் தானா?

திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ளது.

மேலும் இப்படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் அவரை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

இப்படியான நிலையில் நடிகை ஜோதிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதற்காக இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. என்னைத் தவிர இந்த படத்தில் வேறு யார் நடித்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

ஜோதிகா சந்திரமுகி 2 படத்தில் நடிக்க யாரும் அணுகவில்லை என்று கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தான் சூப்பர் ஸ்டார், அந்தப் பாட்டு தான் ரொம்ப பிடிக்கும் – ஓபனாக பேசிய தெலுங்கு நடிகர் (வீடியோ இதோ)

மேலும் ஜோதிகாவின் நடிப்பில் அடுத்ததாக வரும் மே 29-ஆம் தேதி பொன் மகள் வந்தாள் என்ற திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசானின் வெளியாக உள்ளது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.