Juliana

கையை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த ஜூலியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுதான் அந்த வீர தமிழச்சி என கமெண்ட் பதிவிட ஜூலி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Julie Reply to Fans Troll : தமிழகத்தின் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஜூலி. அதன் பின்னர் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியால் தன் பெயரை மொத்தமாக கெடுத்துக் கொண்டார். அதன் பின்னர் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வந்தனர்.

தற்போது படங்களில் கவனம் செலுத்துவது ஜூலி விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் கையைத் தூக்கியபடி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க இதுதான் அந்த வீரத் தமிழச்சி என கூற ஜூலி கடுப்பாகி உள்ளார்.

உங்கள மாதிரி தப்பான கமெண்ட் போடற எல்லாரையும் மீறி இன்னமும் ஜெயிக்கணும்னு போராடுற நான் வீர தமிழச்சி தான் என கூறியுள்ளார்.