Bigg Boss Jodi Judges

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சிக்கு நடுவராக வரப்போவது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Judges for BiggBoss Jodi : தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போன சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உலகளாவிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களை ஜோடி சேர்த்து பிக் பாஸ் என்ற பெயரில் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த ரியாலிட்டி ஷோவுக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்த வீடியோவில் பிரபல நடிகர் மற்றும் நடிகை நடுவராக பங்கேற்க உள்ளார்கள் என கூறப்பட்டது. தற்போது அவர்கள் யார் என்பது தெரியவந்துள்ளது. ஆம் நடிகர் சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தான் இந்த நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.