ரஜினி

2010 ஆம் ஆண்டில் நடந்தது போல இந்த வருடமும் ரஜினிக்கு பெரிய கண்டம் காத்திருக்கிறது என அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஜோதிடர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி காந்த். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் நான் அரசியலில் ஈடுபடப் போவதாக கூறி வந்த ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிட்டதாக தெரிவித்தார். இந்தக் கொரானா பேரிடர் காலத்தில் தன்னுடைய உயிரை விட தன்னை நம்பி வரும் ரசிகர்களின் உயிர் முக்கியம் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜோதிடர் சாந்த குமார் என்பவர், ” ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் அவருக்கு அதிகமான எதிரிகள் உருவாவார்கள். அவருக்கு தற்போது நேரம் சரியில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் மூன்று மாதம் முதல் மூன்று வருடங்களுக்கு அவருக்கு கெட்ட நேரம். அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே அவருக்கு நல்லது.

ரஜினி

2010 ஆம் ஆண்டு திடீரென அவரது உடல் நிலை மோசமானது போல இந்த வருடத்திலும் நடக்க வாய்ப்புள்ளது. அவர் வீட்டில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

கன்னியாகுமரி ஜோதிடர் சாந்தகுமாரின் இந்த கணிப்பு ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. தலைவர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்போதும் போல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.