Jonny Master About Thalapathy 65

தளபதி 65 படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தி உள்ளார் மாஸ்டர் பட டான்ஸ் மாஸ்டர்.

Jonny Master About Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேர்தலுக்கு பிறகு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள ஜானி டான்ஸ் மாஸ்டர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த விஜய்க்கு மிக்க நன்றி. என் மீதுள்ள நம்பிக்கையை வெற்றியாக மாற்றுவேன். அருமையான பாடலின் ரிகர்சல் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கும் எனவும் ஷூட்டிங் 3 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார்.