Joe Micheal Blast Balaji Murugadoss

பாலாஜி முருகதாஸ் பத்ரகாளி ஆக மாறியது போலவும் அவர் கையில் ஜோ மைக்கேல், ஆரி, அர்ச்சனா, ரியோ ராஜ், தயாரிப்பாளர் ரவீந்திரன் தலை இருப்பது போல அந்த புகைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Joe Micheal Blast Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிறு உடன் முடிவுக்கு வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்த பாலாஜி நடவடிக்கையால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடித்தது என கூறலாம். அதே சமயம் அவருக்கு மக்கள் மத்தியில் வெறுப்பும் அதிக அளவில் ஏற்பட்டது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி முருகதாஸ்க்கு ஜோ மைக்கேல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கம்பெனியை டுபாகூர் கம்பெனி என கூறியதால் அதற்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

தற்போது பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். அதில் பாலாஜி கூறுவதா பத்ரகாளியாக இருக்கிறார்.

அவரை எதிர்த்துப் பேசி வந்த ஜோ மைக்கேல், அர்ச்சனா, ரியோ ராஜ், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் தலை கையில் இருப்பது போல அந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தைப் ஜோ மைக்கல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாலாஜி முருகதாசை விமர்சனம் செய்துள்ளார். மேலும் தம்பி நீ ஜெயிலுக்கு போறது உறுதி என கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் பாலாஜி முருகதாசின் பெய்டு ஆர்மியால் உருவாக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.