Jayam Ravi’s directorial  Yogi Babu | Jayam Ravi's next film will be directed by debut director Pradeep Ranganathan. | Kollywood | Tamil Cinema

Jayam Ravi’s directorial  Yogi Babu :

ஜெயம் ரவி அடுத்த ஆண்டு இயக்குநர் அவதாரம் எடுக்கிறாராம். இவர் இயக்கும் முதல் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுதான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார்.

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவிபள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

என்.ஜி.கே படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை – இதுதான் முதல் படமாம்!

மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தை லக்‌ஷ்மண் இயக்குகிறார். இது ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம்.

இது ஒருபக்கம் இருக்க ஜெயம் ரவி அடுத்த ஆண்டு இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம். இவர் இயக்கும் முதல் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுதான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.