Jayam Ravi Video With Wife

மகளிர் தின விழாவில் மனைவியுடன் சேர்ந்து ஜெயம் ரவி செய்த வேலை லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Jayam Ravi Video With Wife : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக பூமி என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் வழியாக வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் கடந்த மகளிர் தின ஸ்பெஷலாக மனைவியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னுடைய மனைவிக்கு நிகராக உடற்பயிற்சி செய்ய முற்பட்டு கடைசியில் பல்பு வாங்கியுள்ளார் ஜெயம் ரவி. இது குறித்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெண்களால் எதையும் செய்ய முடியும். உங்களுக்குப் பிரியமான அவர்களுடன் இணைந்து நீங்களும் செய்யுங்கள். அனைவருக்கும் வலிமையான மகளிர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ பாருங்க