Jayam Ravi Look in Ponniyin Selvan
Jayam Ravi Look in Ponniyin Selvan

பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்து வரும் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Jayam Ravi Look in Ponniyin Selvan : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்த நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக பொன்னியின் செல்வனில் அவர் அருள் மொழி வர்மனாக நடித்து வரும் கெட்டப் போஸ்டரை உருவாக்கி ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகி வருகின்றன.

இது அதிகாரப்பூர்வமாக போஸ்டர் இல்லை என்றாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.