Jason Sanjay First Movie Salary
Jason Sanjay First Movie Salary

தளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ள முதல் படத்திற்கான சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

Jason Sanjay First Movie Salary : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க விஜயின் மாமாவான பிரிட்டோ இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமாரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

பல்பு கொடுத்த தீனா, அடி கொடுத்து மீண்டும் பல்பு கொடுத்த தளபதி விஜய் – முதல் முறையாக வெளியான மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட் கலாட்டா!

இந்த படத்தை அடுத்து விஜய், AR முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 என்ற படத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் கனடாவில் படித்து வரும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் அடுத்ததாக பிரிட்டோவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இதனையடுத்து தற்போது தன்னுடைய முதல் படமான இந்தப் படத்திற்கு சஞ்சய் ரூபாய் 1.5 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஆனால் தயாரிப்பாளர் பிரிட்டோ அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு அதெல்லாம் உண்மை அல்ல. சஞ்சய் நடிக்க போவதாக வெளியான தகவலே உறுதியானது அல்ல என கூறியுள்ளார்.