Bigg Boss tamil

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பவைகள் குறித்து கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார் விஜய் டிவி பிரபலம்.

James Vasanth About BiggBoss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்கள் திரையுலகில் அறிமுகம் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் என பலரும் கலந்து கொள்வது வழக்கம்.

போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் நிகழ்ச்சிக்குப் பிறகு திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலிப்பது உண்டு, சிலர் கெட்ட பெயரை பெற்று இருக்கும் இடம் தெரியாமல் போவதும் உண்டு.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜேம்ஸ் வசந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊற்றியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் புகை பிடிக்கவும் மது அருந்தவும் கற்றுக் கொள்கிறார்கள். ஆண்களுடன் ஆட்டம் போடுவது சாதாரணமாகி விடுகிறது. இதனை நான் நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸில் கலந்து கொண்ட நடிகையிடமே கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.