khashoggi
உலகையே உலுக்கிய பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்கி கொலை குறித்து சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

Jamal khashoggi killed under my watch – மெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் முக்கிய செய்தியாளராக இருந்தவர் ஜமால் கஷோகி.

இவர் தொடர்து சவுதி அரேபிய இளவசர் முகமது பின் சல்மான் குறித்து பல பகீர் தகவல்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்து சில தினங்களுக்கு பின்னரே இந்த விவகாரம் உலகிற்கு தெரிய வந்தது.

இந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்கா உட்பட பலநாடுகளும் சவுதி அரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்தன.

விஜய் வில்லனுடன் கைக்கோர்த்த பிரபுதேவா – இந்தியா முழுக்க வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில், பிபிஎஸ் எடுத்த ஆவணப்படத்தின் புரமோ வீடியோவில் பேசியுள்ள சவுதி இளவரசர் ‘ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு. எ

ன்னுடைய கண்காணிப்பில்தான் இந்த கொலை நடந்தது’ என தெரிவித்துள்ளார்.அக்டோபர் 1ம் தேதி முழு ஆவணப்படமும் வெளியாகவுள்ளது.

எனவே, அப்போது இந்த கொலைக்கான காரணத்தை இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.