அண்ணாத்த படம் பற்றி பேசியுள்ளார் வில்லனாக நடித்து வரும் ஜெகபதி பாபு.

Jagapathi Babu About Annathae : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனா வின் இரண்டாவது தலை அதிதீவிரமாக இருந்து வரும் நிலையிலும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 10 நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பு களையும் முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் ஜெகபதிபாபு வீடியோ ஒன்றின் மூலம் அந்த படத்தின் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதாவது இதில் அவருடைய கதாபாத்திரம் கொடூர வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என கூறியுள்ளார். அரவிந்த சமேதா படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு அண்ணாத்த படத்தின் கதாபாத்திரம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.