ஜூன் 18 ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jagame Thanthiram Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை வைத்து ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் OTTயில் தான் ரிலீஸ் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது வரும் ஜூன் 18-ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.