Jagame Thanthiram Musical Update
Jagame Thanthiram Musical Update

ஜகமே தந்திரம் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று சத்தமில்லாமல் வெளியாகியுள்ளது.

Jagame Thanthiram Musical Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பல கோடிகளில் வியாபாரம் பேசிய அமேசான் – OTTல் ரிலீஸாகிறதா வலிமை?? – வெளியான லேட்டஸ்ட் தகவல்கள்!

இந்த நிலையில் தற்போது சோனி மியூசிக் நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. தனுஷின் பிறந்தநாளில் ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட என்ற முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.