தமிழ் சினிமாவில் புதிய புரட்சியாக 17 மொழிகளில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Jagame Thanthiram Dubbing Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

பொதுவாக ஒரு தமிழ் படம் வெளியானால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆனால் தற்போது முதன்முறையாக ‌‌ ஜகமே தந்திரம் திரைப்படம் ஆங்கிலம் உட்பட மொத்தம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உருவாகும் திரைப்படம் இத்தனை மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்பதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.