Jackson Sanjay Call to AR Ameen

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் மகனுடன் வீடியோ காலில் பேசியுள்ளர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.

Jackson Sanjay Call to AR Ameen : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரஹ்மான்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். இதனால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆறுதல் கூறியும் அவருடைய தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் வந்தனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜயின் மகன் சஞ்சய் தன்னுடைய நண்பரான ஏ ஆர் அமீனுக்கு வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதுகுறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் கவனத்தைப் பெற்று வருகிறது. தளபதி விஜய் மற்றும் ரகுமான் இடையே நல்ல நட்பு இருந்துவரும் நிலையில் அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையே அந்த நட்பு தொடர்வது மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.