Issue on Thalapathy 65 Shooting

கொரானா வைரஸ் தொற்றால் தளபதி 65 படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.

Issue on Thalapathy 65 Shooting : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இதற்கான படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் தொடங்கின. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் தற்போது குரானா வைரஸ் பற்றி இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என புலம்பி வருகின்றனர்.