iruttu
சுந்தர்.சி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘இருட்டு’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

Iruttu movie official trailer video -முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் இயக்குனர் துரை. நீண்ட வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்தவர் தற்போது ‘இருட்டு’ என்கிற திகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சுந்தர் சி. காவல் அதிகாரியாக நடித்துள்ளார். நர மாமிசம் சாப்பிடும் கும்பலை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

மறைக்கப்பட்ட மாவீரனின் வரலாறு – ‘சைரா நரசிம்ம ரெட்டி’ டிரெய்லர் வீடியோ

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது இப்படத்தில் அதி பயங்கர திகில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.

காட்டுப்பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களும், அதற்கும் இருட்டுக்கும் உள்ள தொடர்பும் பற்றியும் காவல் அதிகாரியான சுந்தர் சி. விசாரணை செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

YouTube video