இரண்டாம் குத்து

தீபாவளிக்கு தியேட்டரில் இரண்டாம் குத்து என்ற திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இந்தியாவிலும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் படி மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகள் திறக்கப்பட்டு பழைய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

இப்படியான நிலையில் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள அடல்ட் காமெடி படமான இரண்டாம் குத்து திரைப்படம் வெளியாகும் என சென்னை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

VFX கட்டணங்களை ரத்து செய்யும் வரை புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருந்தது.

இப்படியான நிலையில் தற்போது ப்ரொஜெக்டர் நிறுவனங்கள் நவம்பர் மாதம் ரிலீசாகும் படங்களுக்கு VFX கட்டணங்களை ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து இரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.