Iran Issue  : ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் நீட்டிக்க கோரி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரித்தது.

ராணுவ தளவாடங்களை ஈரான் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விதித்துள்ள தடை 13 ஆண்டுகளாக அமலில் உள்ளது.

அந்த தடை வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஈரான் மீதான ஆயுத வர்த்தக தடையை மேலும் நீட்டிக்க வகைசெய்யும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அமெரிக்கா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

இஸ்ரேல் ஒப்பந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான பின்விளைவை சந்திக்கும்! ஈரான் எச்சரிக்கை

15 உறுப்புகளைக் கொண்ட அந்த கவுன்சிலிங் அமெரிக்காவை தவிர தோமினி குடியரசு மட்டுமே அந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது, நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் மற்றும் பிற 8 நாடுகளும் வாக்களிப்பை புறக்கணித்தன. இதை அடுத்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

ஈரான் மீதான ராணுவ வர்த்தக தடையை நீக்குமாறு வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த ஆறு நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தினர்.

இஸ்ரேலும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது. பிறகு தற்போது உள்ளதைவிட அதிக அழிவை ஏற்படுத்தும் என்பது அந்த நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். எனினும் அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டது என்றார் மைக்கேல் பாம்பேயோ.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.