யோகி பாபு மற்றும் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் இடையே இருக்கும் உறவு குறித்து ஐபிஎல் கிரிக்கெட் வீரர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

IPL Player Shreevats About Yogi Babu : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கடந்த வாரம் வெளியான கர்ணன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் ஸ்ரீீவத்ஸ் யோகி பாபு குறித்து பேசியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் மண்டேலா திரைப்படம் பார்த்ததாகவும் யோகி பாபுவின் அசாத்தியமான நடிப்பு தன்னை கவர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் வேர் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் நண்பர் என தெரிய வந்தது. பின்னர் அவருக்கு வீடியோ கால் செய்து பேசியதாகவும் ஒரு ரசிகனாக அவரிடம் பேசியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.