நந்திதா ஸ்வேதா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஐபிசி 376 படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ்ஸை பிரபல நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
IPC 376 Movie Hindi Dubbing Rights Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பல படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் தற்போது ஐபிசி 376 என்ற நாயகி மையமாகக் கொண்ட படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்கியுள்ளார். எஸ் பிரபாகர் பவர் கிங் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் ஆகியவை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து தற்போது மாடர்ன் மீடியா என்ற நிறுவனம் இந்த படத்தை பார்த்து வியந்து படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் பெரிய அளவில் விற்பனையாகி இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகவும் அதிகமாகி உள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.