Investment in Tamilnadu

நோய் தொற்று காலத்திலும் தமிழகத்தை நோக்கி வரும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீடுகள், பல்லாயிரம் கோடி முதலீடுகளோடு ,ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன.

Investment in Tamilnadu : தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிடும் வகையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில்துறையில் முன்னனி மாநிலமாகத் திகழச் செய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதாக முதலீடுகளுக்கான குறியீடுகளை வெளியிடும் “கேர்” நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடுதல், சிப்காட் தொழில் பூங்காக்களின் புவியியல் தகவலமைபிற்கான புதிய இணையம் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா என மொத்தம் 24 திட்டங்களுக்கு ரூ.24,458 கோடி முதலீட்டில், 54,218 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாகவும், மேலும், பல உயர்ச்சியை பெற தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காலத்திலும் அதிக முதலீடுகள் ஈர்த்து முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனும், வளர்ச்சியுமே முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளது என்றும், வெளிநாட்டு பயணத்தின் போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்ளில் 10 செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

39,941 கோடி ரூபாய் முதலீட்டில் 62 திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மின்சார வாகன உற்பத்தி, மருந்து உற்பத்தி உள்ளிட்ட 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதை சுட்டி காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது என்றும் புதிய தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழன்சாமியின் தொடர் முயற்சியால் கொரோனா கால கட்டத்திலும் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

கையொழுத்தான நிறுவனத்தில் முக்கியமானதாக, ஒலா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை ஓசூரில் நிறுவுகிறது. 2, 354 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த ஆலை மூலம் 2, 182 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கையெழுத்தானது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஒலா நிறுவனத்தின் செயல் தலைவர் பாவிஷ் அகர்வால், இந்த ஆலை அதி நவீன தொழில்நுட்பத்துடன் உலகிலேயே மிகப் பெரும் ஆலையாக அமையவுள்ளது. இதன் மூலம், இந்தியவின் தொழில் திறன் சர்வதேச அளவில் வெளிப்படும். சர்வதேச சந்தைகளுக்கு உகந்த வகையில் இந்திய தயாரிபுகள் இருக்கும் என்பதை வெளிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.