Investment in Tamilnadu 2020
Investment in Tamilnadu 2020

கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழகத்தின் முதலீடுகள் குவிந்து வருகின்றன. மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Investment in Tamilnadu 2020 : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க அந்நிய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில்துறையில் முன்னணி மாநிலமாகத் திகழச் செய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர்மட்டக் குழுவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதனால் ரூ. 25,213 கோடி அளவுக்கான தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 49,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் .

2 வது முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் MRF நிறுவனத்துடன் 3,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு கையெழுத்திட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அந்நிறுவனம் பெரம்பலூர், அரக்கோணம், திருவெற்றியூர் ஆகிய இடங்களில் அவர்களது தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Tamil Nadu CM E Palaniswami, Aishwarya Rajesh at the Finals of 68th National Basketball Championship

ராம்ராஜ் (Enes Textile Mills) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், மோபிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Seoyon E-HWA Automotive India Private Limited நிறுவனத்தின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி திட்டங்களுக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க அரசு அனுமதித்துள்ளது.

Kyungshin Industrial Motherson Private Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Ather Energy நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

1000 கோடி செலவில் இன்டர்கிரேட்டர் சென்னை பிசினஸ் பார்க் (Integrated Chennai Business Park) நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் தொடங்க அனுமத்துள்ளது.

இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில், தொழிலதிபர்களை சந்தித்து பல்லாயிரம் கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருகிறார்.

மாநகரங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மட்டும் இல்லாமல் தமிழத்தில் பின் தங்கியிருக்கும் பல பகுதிகளிலும் முன்னணி தொழில் நிறுவனங்களை உருவாக்கி அங்குள்ளோர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் பல திட்டங்களையும் தமிழக அரசு உருவாக்கி வருகிறது என்பது மகிழ்ச்சிகரமான ஒன்று.