Information About Thalapathy 65 Heroine

மாஸ்டர் படத்தின் அப்டேட்டை தொடர்ந்து தளபதி 65 படத்தின் நாயகியாக யார் நடிப்பார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

Information About Thalapathy 65 Heroine : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தில் நாயகியாக யார் நடிப்பார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

இதுமட்டும் உண்மையானால் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணையும் முதல் படமாக தளபதி 65 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.