Indian Military Dance to Ajith Song

அஜித்தின் பாட்டுக்கு இந்திய ராணுவ வீரர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Indian Military Dance to Ajith Song : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படம் பற்றிய தகவல் எதையும் படக்குழு வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

இதனால் பல அஜித் ரசிகர்கள் படக்குழுவினர் மீது கோபத்தில் உள்ளனர். அவர்களின் கோபத்தைத் தணித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது இந்திய ராணுவ வீரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து தல அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெறும் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தான் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

https://twitter.com/RajaaTweetz/status/1333105317069000705?s=19