indian hockey Team
indian hockey Team

indian hockey Team :

மலேசியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி, 3வது போட்டியை ‘டிரா’ செய்தது.

முதல் இரண்டு போட்டிகள் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது போட்டியை சமன் செய்த இந்திய அணி தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் வெற்றி பெறச் பெரும் முயற்சித்தனர்.

கோலாலம்பூரில் 4வது போட்டி நடந்தது. முதல் 30 நிமிட முடிவில் போட்டி 0-0 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 55வது நிமிடத்தில் லால்ரிம்சியாமி ஒரு ‘பீல்டு’ கோலடித்து கைகொடுத்தார்.

இதற்கு மலேசிய வீராங்கனைகளால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற

மலேசியாவுக்கு எதிரான 4வது ஹாக்கி போட்டியில் லால்ரிம்சியாமி ஒரு கோலடித்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடக்க இருக்கும் போட்டிகளில் இது போன்ற பொறுப்புடன் விளையாடி இந்திய பெண் க ள் அணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

3) விராட் கோலிக்கு கிடைத்த மன ஆறுதல் :

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருதை இந்த ஆண்டும் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான விஸ்டன் கிரிக்கெட்டர் ஆஃப் த இயர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விராட் கோலியோடு சேர்த்து மொத்த 5 சிறந்த வீரர்களைத் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் தேர்வு செய்துள்ளது.

அதில் விராட் கோலி, இங்கிலாந்து வீராங்கனை டாமே பியாமவுன்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரண், ரோரி பர்ன்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதை கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து விராட் கோலி தொடர்ச்சியாகப் பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டில் கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 2735 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதில் 11 சதங்கள் அடங்கும். டி 20 வீரருக்கான விருது ரஷீத் கான்க்கும் மகளிருக்கான விருது இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.