Indian 2 Movie Update

இந்தியன் 2 ஷூட்டிங் அப்படியே ஓரம் கட்டிவிட்டு லோகேஷ் கனகராஜ் படத்தின் மீது கவனம் செலுத்தி இருப்பதால் சங்கர் கடுப்பாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Indian 2 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன் இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படமான இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரானா வைரஸ் தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வரை படப்பிடிப்புகள் தொடங்காமலேயே இருந்து வருகின்றன.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் மீது கவனம் செலுத்துகிறார் இதனால் சங்கர் தயாரிப்பு நிறுவனத்தின் மீது கடுப்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று படக்குழுவினரிடம் விசாரிக்கையில் உண்மை தகவல் என்ன என்பது தெரியவந்துள்ளது.

கமல், ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்புகளை நடத்த குறைந்தது 300 பேர் தேவை. ஆனால் தற்போது படப்பிடிப்புகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சங்கருக்கு மேக்கப் போடும் மேக்கப் கலைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவேண்டியுள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் சமூக வலைதளங்களில் பரவி வருவது போல சங்கர், லைக்கா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.