Indian 2
கமலால் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் கைவிட்டு விட முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Indian 2 Shocking Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் இந்தியன் 2.

அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கமல் படத்தின் சூட்டிங் வராமல் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூட்டிங் தொடங்கியபோது கிரேன் அறுந்து விழுந்த விபத்து பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

விஜயின் அடுத்த படம்.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலம் – கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்.!

இதுபோன்று படம் தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சையை இப்படம் எதிர்கொண்டு வருகிறது.

மேலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் தலைவன் இருக்கிறான், சபாஷ் நாயுடு ஆகிய படங்களும் தொடங்கி கைவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதால் இந்தியன் 2 படத்தை கைவிட முடிவு எடுத்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.