Indian 2 Movie Story
Indian 2 Movie Story

இந்தியன் 2 படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Indian 2 Movie Story : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். வே தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சதீஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்தியன் படத்தில் விடுதலைப் போராட்ட வீரரான இந்தியன் தாத்தா ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை களை எடுப்பார்.

ஜில்லா படத்தில் வரும் இந்தக் குழந்தை யார் தெரியுமா? விஷயம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியன் 2 படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை களை எடுக்க உள்ளாராம். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது. இறுதியாக இந்தியன் தாத்தாவே போலீஸில் சரண்டர் ஆகி விடுவாராம்.

உலக நாயகன் கமலஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கி இருப்பதால் அவருக்கு இந்த படம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடனேயே இப்படத்தில் நடித்து வருகிறாராம்.

முதல் பாகத்தை போலவே இந்தப் படத்திலும் சங்கர் தன்னுடைய பிரம்மாண்டத்தை தூவி கமர்ஷியலாக எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.