India vs West Indies : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019, Pro KabaddiLeague

India vs West Indies :

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, கயானா புராவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில், அபாரமாக விளையாடிய இந்தியா 3-0 என ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.

அடுத்து இரு அணிகளும் ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி புராவிடன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

உலக கோப்பை தொடரில் அரை இறுதியுடன் வெளியேறிய பிறகு, இந்தியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிகிலில் இப்படியும் ஒரு சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு – இது தெரியுமா உங்களுக்கு?

தவான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், கே.எல்.ராகுல் 4வது வீரராகக் களமிறங்குவார்.

நடுவரிசையில் கேதார், பன்ட் ஆகியோருடன் மணிஷ் பாண்டே அல்லது ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.புவனேஷ்வருக்கு ஓய்வளிக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவ்தீப் சாய்னி ஒருநாள் போட்டியில் அறிமுகமாக உள்ளார். உலக கோப்பையில் 5 சதங்கள் விளாசி சாதனை படைத்த தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, தனது சூப்பர் பார்மை விட்ட இடத்தில் இருந்து தொடர உள்ளார்.

இரு அணிகளுமே ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறப்பது சந்தேகம் இல்லை.

இந்திய அணி :

விராத் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சாய்னி.

வெஸ்ட் இண்டீஸ் அணி :

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கேல், ஜான் கேம்ப்பெல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஷ்ம்ரோன் ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், பேபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வெயிட், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், ஓஷேன் தாமஸ், கெமார் ரோச்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.