India vs Australia Meet Archie Schiller
India vs Australia Meet Archie Schiller

India vs Australia Meet Archie Schiller – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

அந்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆஸ்., அணியில் 7 வயது சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஆஸ்திரேலியா அணியில் 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் இணைக்கப்பட்டு உள்ளதாகவும்,

பாக்ஸிங் டே மேட்சில் அணிக்கு இணை கேப்டனாகவும் இருப்பார் என்றும் ஆஸ்., அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்தார்.

ஆர்ச்சி சில்லர், இவருக்கு 7 வயதே ஆகிறது. இவர் மூன்று மாத குழந்தையாக இருந்த போது இருதய நோயால் பாதிக்கப்படவே, ஒரு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது அவரின் தந்தை உன்னுடைய ஆசை என்ன என்று கேட்ட போது அதற்க்கு சிறுவன், “எனக்கு ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக வேண்டும்“ என்று கூறினானம். இதனை, அவரின் தந்தை ஆஸ்., கிரிக்கெட் நிர்வாகத்திடம் கூறினார்.

நடந்ததை அறிந்த ஆஸ்., அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆர்ச்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். மற்றும் ஆஸ்., அணியின் 15-வது வீரராக ஆர்ச்சி இணைந்து உள்ளார்.

இருந்தும், அவர் அணியில் விளையாடுவாரா இல்லை வெளியில் இருந்து உதவுவாரா என்று பொறுத்து இருந்து பார்த்தால் தான் தெரியும்.

ஆல்ச்சி இதனை பற்றி கூறுகையில், நான் விளையாடினால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க முடியும் என்றும் அதற்கான பயிற்சியும் எடுத்துளேன் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.